1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (10:20 IST)

வேலை தேடி வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை! வடமாநில இளைஞர்கள் தப்பி ஓட்டம்! – திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

abuse
திருப்பூருக்கு வேலை தேடி வந்த சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.



பீகார் மாநிலம் சிதமாரி பகுதியை சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார், ரூபேஷ்குமார். இவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு அருகே உள்ள சிவன்மலை பகுதியில் வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

சமீபத்தில் ஊருக்கு சென்று விட்டு திருப்பூர் ரயில் நிலையம் வந்த ரூபேஷ்குமார் அங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை சந்தித்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக வேலை தேடி திருப்பூர் வந்த அந்த சிறுமி தனக்கு வேலை வாங்கி தரும்படி ரூபேஷ்குமாரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு தான் வேலை பார்க்கும் ஆலையிலேயே வேலை வாங்கி தருவதாக கூறி அவரை தங்க வைக்க ஏற்பாடு செய்வதாக அழைத்து சென்ற ரூபேஷ்குமார் தனது அறைக்கு பக்கத்து அறையை உறவினர்கள் வந்திருப்பதாக வீட்டு உரிமையாளரிடம் கூறி வாடகைக்கு எடுத்திருக்கிறார்.


அங்கு அந்த பெண்ணை தங்க வைத்துவிட்டு பின்னர் புத்தாண்டிற்கு கேக் வெட்டலாம் என ரூபேஷும், நிதிஷும் தங்கள் அறைக்கு அழைத்துள்ளனர். அங்கு அவருக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து குடிக்க கொடுத்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போதை தெளிந்த சிறுமி கத்தத் தொடங்கவே அக்கம்பக்கத்தினர் குவிந்துவிட வடமாநில இளைஞர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவான வடமாநில இளைஞர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K