1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2025 (16:09 IST)

Get out Modi? Get Out Stalin? எது ட்ரெண்டாகும்? எக்ஸ் தளத்தில் இப்போதே தொடங்கிய ஹேஷ்டேக் மோதல்!

Udhayanithi Annamalai

உதயநிதி ஸ்டாலினை ஹேஷ்டேக் ட்ரெண்டிங் மோதலுக்கு அண்ணாமலை அழைத்த நிலையில் வேகமாக Get out Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

 

மத்திய அரசு கல்வி நிதி வழங்காதது குறித்த விவகாரம் வளர்ந்து உதயநிதி - அண்ணாமலை இடையே வாக்குவாதமான நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை “உதயநிதிக்கு தைரியம் இருந்தால் இப்போது Get out Modi என சொல்ல சொல்லுங்கள். நான் அறிவாலயத்தில் வந்து வால் போஸ்டர் ஒட்டுகிறேன்” என சவால் விடுத்தார். அதற்கு உதயநிதி பதில் அளித்தபோது, தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை வாங்கி தர துப்பில்லை என்றும், நிதி பிரச்சினையை திசை திருப்ப பாஜகவினர் முயல்வதாகவும் கூறினார்.

 

இந்நிலையில் சேலம் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “நீங்கள் (திமுக) Get Out Modi என ட்வீட் போடுங்கள். நான் நாளை காலை 6 மணிக்கு Get Out Stalin என பதிவிடுகிறேன். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம். நீங்கள் பதிவிடும் ட்வீட்டை வித அதிக வரவேற்பை எனது ட்வீட் பெறுகிறதா இல்லையா பார்ப்போம். இது பாஜகவின் காலம்” என கூறியுள்ளார்.

 

இவ்வாறு அண்ணாமலை சொன்ன சில நிமிடங்களிலேயே திமுகவினர் Get Out Modi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்த ட்வீட் 180K ட்ரெண்டிங்கை தொட்டுள்ள நிலையில், பாஜகவினரும் Get out Stalin ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்க உள்ளனர். இதனால் நாளை இரு கட்சிகளிடையேயான ஹேஷ்டேக் மோதல் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K