தில் இருந்தா 10 மணிக்கு பீச்சுக்கு வாங்க! – காயத்ரி ரகுராம் சவால்!
திருமாவளவனுக்கு எதிராக காயத்ரி ரகுராம் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. திருமாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம் அவரை பற்றி அவதூறான வார்த்தைகளை உபயோகித்தார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் காயத்ரி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனக்கு திருமா கட்சியை சேர்ந்த சிலர் அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாக காய்த்ரி ட்விட்டரில் பதிவிட்டார்.
இதனால் காயத்ரி ரகுராம் மற்றும் திருமா கட்சியினர் இடையேயான மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் ”இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை. நான் 27ம் தேதி காலை மெரினாவுக்கு செல்ல உள்ளேன். அங்கு இந்து மதத்தை பற்றி தவறாக பேசுபவர்களிடம் விவாதிக்க தயார்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காயத்ரி ரகுராம், வி.சி.க இடையே நடைபெற்று வரும் இந்த மோதல் உள்ளாட்சி தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என எதிர்கட்சி கூட்டணி கவலையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.