1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (21:01 IST)

திடீரென திருமாவளவனை சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம்: என்ன காரணம்?

gayathri
திடீரென திருமாவளவனை சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம்: என்ன காரணம்?
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய நடிகை காயத்ரி ரகுராம் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்துள்ளார். 
 
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் இந்த சந்திப்பின் பின்னணியில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ஜெயராம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்த நிலையில் அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்துள்ளார். 
 
நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva