வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (06:35 IST)

கவின் தாயாருக்கு சிறை: ஊடகங்களை தாக்கும் பிக்பாஸ் 1 நடிகை!

பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவரான கவினின் தாயார் உள்பட மூன்று பெண்களுக்கு நேற்று வழக்கு ஒன்றின் தீர்ப்பில் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன
 
இந்த நிலையில் பிக்பாஸ் 1 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுமாதிரி செய்திகளை வெளியிட்டு கவினின் எதிர்காலத்தை கெடுக்க வேண்டாம். கவின் ஒரு வளர்ந்து வரும் நடிகர். வெற்றிகாக போராடும் ஒருவர். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்ததை பெரிதுபடுத்த வேனாம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களையும் வாழ விடுங்கள்' என்று கூறியுள்ளார்.
 
இந்த செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு பிக்பாஸ் டீம், விஜய் டிவி, கமல்ஹாசன் ஆகியோர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ப.சிதம்பரம் தேசிய ஊழலில் ஊடகங்கள் கவனம் செலுத்துங்கள். சின்னத்திரை சங்கமும் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.