வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (07:12 IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு!

ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் 25 சமையல் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் ரூபாய் 15 உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்த உயர்வின் காரணமாக சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூபாய் 915.50 என்ன விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமையல் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் நெருங்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே ஆகும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.