இன்று முதல் டாஸ்மாக் பார் திடீர் மூடல்: மதுப்பிரியர்கள் கவலை

Last Modified வெள்ளி, 1 டிசம்பர் 2017 (08:22 IST)
டாஸ்மாக் பார்களில் கிடைக்கும் வருமானத்தில் 3% வரி கட்ட வேண்டும் என்றும் இல்லையேல் டாஸ்மாக் பார்கள் மூடப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று முதல் டாஸ்மாக் பார்களை மூட
தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் மதுப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளதாக தெரிகிறது.

டாஸ்மாக் பாருக்கு ஏற்கனவே 2.5% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பார்களின் வருமானம் அதிகரித்துள்ளதால் அந்த வரியை 3%ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வை எதிர்த்து கண்டனம் தெரிவித்த டாஸ்மாக் 'பார்'களை டெண்டர் எடுத்து நடத்தும் உரிமையாளர்கள் இந்த வரி உயர்வுக்கு தடை விதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துது.

இந்த நிலையில் இன்று முதல் டாஸ்மாக் பார்களை மூட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தங்கமணியிடம் அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நிலைமை சுமூகமாகும் என்றும் டாஸ்மாக் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :