இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை.. தமிழகத்தின் எந்த பகுதியில் தெரியுமா?
இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தமிழகத்தில் தொடங்க இருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் அதாவது அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி பகுதியில் நல்ல மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலாக இனி வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மற்றபடி
Edited by Mahendran