வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 மே 2021 (07:09 IST)

இன்று முதல் பால் விலை குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் ஒன்று பால் விலை குறைப்பு என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து இன்று முதல் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் அளவுக்கு பால் விலை குறைக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
மே 16ஆம் தேதி முதல் பால் விலை குறைப்பு அமலுக்கு வரும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் குறைக்கப்பட்ட பால் விலையை குறைத்தும் புதிய விலை குறித்து தகவலையும் தற்போது பார்ப்போம்.
 
ஆவின் பால் நீல நிறம்: ஒரு லிட்டர் ரூ.40 அரை லிட்டர் ரூ.20
 
ஆவின் பால் பச்சை நிறம்: அரை லிட்டர் ரூ.22
 
ஆவின்பால் ஆரஞ்சு: அரைலிட்டர்; ரூ.24
 
ஆவின்பால் இளஞ்சிவப்பு நிறம்: அரைலிட்டர்: ரூ.18.50
 
டீமேட் பால்: ரூ.57 ஒருலிட்டர்