ரெசார்டில் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு கரம் நீட்டும் எம்எல்ஏக்கள்!

Sasikala| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:27 IST)
செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு  எதிராகப் போர்க்கொடி தூக்கினார். அதன் தொடர்ச்சியாக  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றார்கள்.

 
இதந்தொடர்ச்சியாக அதிமுகவில் சசிகலாவுக்கு எதிரான அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்வர் ஓபிஎஸ்  போர்க்கொடி தூக்க ஆரம்பித்ததும் சசிகலா அதிருப்தியாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓபிஎஸ் பக்கம் அணிதிரள்கின்றனர்.
 
இந்த நிலையில் சசிகலா தரப்பினரால் ரெசார்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்எல்ஏக்களில் சிலர் முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வத்திற்கு ரகசிய செய்தி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனையடுத்து தற்போது பன்னீர் செல்வத்தின் பலம் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெசார்டில் தங்கியிருப்பவர்களில் 7  எம்எல்ஏக்கள் தூதுவிட்டிருப்பதாகவும், அப்படி இருக்கும் பட்சத்தில் பன்னீர் செல்வத்தின் பலம் 13 ஆக உயரக்கூடும் என்று  தெரிகிறது.
 
இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்எல்ஏக்களை சுதந்திரமாக  செயல்படவிட்டாலே எங்களின் பலம் அதிகரித்துவிடும் என்கின்றனர்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :