திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (16:22 IST)

''இறப்பிலும் பிரியாத நண்பர்கள்'..... நண்பர் உயிரிழந்ததைக் கேட்ட சக நண்பர் உயிரிழப்பு

friends dead
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நண்பர் உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த சகநண்பரும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர்  சிவராமகிருஷ்ணன். இவரது உயிர்த் தோழன் ராமலிங்கம். இவர்கள் இருவரும்  பால்ய காலம் முதல் நண்பர்களாக இருந்துள்ளனர்.

80 வயதான சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி இரண்டு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், 82 வயதாகும் ராமலிங்கத்திற்கு மனைவி மற்றும் 2 மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

சிவராமகிருஷ்ணன் மன்னார்குடி அருகேயுள்ள நாலாம் தெருவிலும், ராமலிங்கமும் அதே பகுதியில் வசித்து வந்தனர்.  இவர்கள் இருவருமே ஒன்றாகப் பள்ளியில் படிப்பை முடித்து, நாகையில் ஒரே அறையில் தங்கி பாலிடெக்னிக்  படிப்பு முடித்தனர்.

பாமணியில் உள்ள மத்திய அரசு  நிறுவனத்தில் இருவரும் வேலைக்குச் சேர்ந்து ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர்.

இவர்கள் இருவரின் குடும்பத்தினரும் இருவரும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  சிவராமகிருஷ்ணன் உடல்நலம் பாதிப்படைந்து உயிரிழந்த தகவலைக் கேட்ட, அதிர்ச்சியடைந்த அவரது   நண்பர் ராமலிங்கமும் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.