வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (19:17 IST)

18 வயதிற்கு மேல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி - மோடி

பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தற்போது உரையாற்றி வருகிறார்.

அதில், நாட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்யும் எனவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தடுப்பூசில் இறக்குமதி  செய்யப்படும் என மோடி தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் மேலும் 2 நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்….ஏற்கனவே 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதில் 3 நிறைவடையும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மூக்கு வழியாக செலுத்தும் வகையில் கொரொனா தடுப்பூசில் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும்,  இந்தியாவில் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

இதில் முக்கியமாக 18 வயதிற்கு மேல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறியுள்ளார். அதாவது வரும் 21 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை தீர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

அதேசமயம் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.