1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (20:07 IST)

மே 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட 13 ஆயிரத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியை அரசு முடக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
கொரோனா  பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இந்த தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் இலவசமாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் இருப்புகள் இருப்பதாக தமிழக அரசின் சுகாதார துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..