புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (19:54 IST)

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுபோட இலவசமாக கார்: உபேர் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனை அடுத்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்பதும் காவல்துறை வாக்குப்பதிவு நாளன்று பாதுகாப்பாக தேர்தலை நடத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவுக்கு செல்வதற்கு இலவசமாக கார்களை தருவதற்கு உபேர் நிறுவனம் முன்வந்துள்ளது
 
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் ஆகியோர்கள் தங்களுக்கு தகவல் தந்தால் வீட்டிலிருந்து வாக்குப்பதிவு மையத்திற்கு இலவசமாக கார் மூலம் அழைத்துச் செல்வோம் என்றும் அதே போல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவர்களை வீட்டிற்கும் இலவசமாக அழைத்துச் செல்வோம் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது