ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (15:14 IST)

காவிரி ஆற்றில் செல்ஃபி : கை நழுவி ஆற்றில் விழுந்த 4 வயது சிறுவன்

காவிரி ஆற்றுப்பாலத்தின் மீது ஒரு தம்பதி செல்ஃபி எடுக்கும் போது அவர்கள் 4 வயது குழந்தை ஆற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  எனவே, இந்த நீரைக்காண ஆற்றுப் பாலங்களின் மீது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரசித்து செல்கின்றன்ர்.
 
இந்நிலையில். கரூர் எல்.ஜி.பி நகரை சேர்ந்த பாபு மற்றும் அவரின் மனைவி ஷோபா ஆகியோர் தங்கள் 4 வயது சிறுவன் தன்வந்துடன் காவிரி ஆற்றில் ஓடும் வெள்ளத்தை பார்ப்பதற்காக மோகனூர் ஆற்றுப்பாலத்திற்கு வந்துள்ளார். சிறுவன் தன்வந்திற்கு அன்று பிறந்த நாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக அவர்கள் வெளியே வந்ததாக தெரிகிறது.
 
அப்போது, சிறுவனை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் பாலத்தில் செல்பி எடுத்த போது, கை நழுவி அவன் ஆற்றில் விழுந்து விட்டான். இதனால், அதிர்ச்சியைடைந்த சிறுவனின் பெற்றோர் பேச முடியாமல் நிலை குலைந்து கதறி அழுதனர். 
 
ஆனால், செல்பி எடுக்கும் போது சிறுவன் விழவில்லை. சிறுவனை அவனின் தந்தை கையில் வைத்த போது நழுவி ஆற்றில் விழுந்து விட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 
 
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தீயனைப்பு வீரர்களை வரவழைத்து ஆற்றில் தேடினர். ஆனாலும், இதுவரை சிறுவன் கிடைக்கவில்லை. 
 
சிறுவனை தவறிவிட்டு அழுத பெற்றோரின் கண்ணீர் அங்கிருந்தவர்களின் மனதை கரைத்தது.