ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (07:49 IST)

4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்.. தீவிர தேடுதல் பணியில் அமலாக்கத்துறை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நான்கு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருப்பதை அடுத்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவரது சகோதரர் அசோக்குமார் என்பவரிடமும் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் சம்மனை ஏற்காமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை 40 பேர் ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் 20 பேர் மட்டுமே ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva