பொடி வைத்து பேசிய மைத்ரேயன்... விடை தேடும் ஈபிஎஸ் - ஓபிஎஸ்!!
எனக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்காதது வருத்தம் என மைத்ரேயன் வெளிப்படையாக் கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்ய சபா எம்பி-க்கள மைத்ரேயன் உடபட 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடம் முடிந்தது. கடைசி நாளான நேற்று மைத்ரேயன் அவையில் பேசிய போது கண் கலங்கினார். கலங்கிய கண்களோடு அவர் பேசியது பின்வருமாறு...
நீண்ட அனுபவத்திற்கு பின் மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளேன். பார்லிமென்ட்டைப் பொறுத்தவரை இது எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம். ஆனால் மாநில அரசியலில் இனிமேல்தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்கப் போகிறது என்று தெரிவித்தார்.
மைத்ரேயனின் இந்த பேச்சுக்கி அர்த்தம் என்னவென விடை தேடி வரும் ஈபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு அடுத்த இடியை போட்டுள்ளார். அதாவது இன்று மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன், அது கிடைக்கவில்லை.
அதிமுகவில் மீண்டும் எம்.பி. பதவி கிடைக்கும் என நினைத்தேன். அதுவும் கிடைக்காதது எனக்கு வருத்தம். அதேபோல் இரட்டை தலைமை என்பதில் சாதக, பாதகங்கள் உள்ளன. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது சிறந்ததாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
மைத்ரேயன் தனது அதிருப்தியை வெளியிப்படையாக தெரிவித்துள்ளதால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.