ராம மோகனராவ் கைது? உடல் நலக்குறைவு நாடகம் அரங்கேற்றம்: கார்டனுக்கு தொடர்பு?

ராம மோகனராவ் கைது? உடல் நலக்குறைவு நாடகம் அரங்கேற்றம்: கார்டனுக்கு தொடர்பு?


Caston| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (11:10 IST)
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
 
வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அவரது மகன் மற்றும் நண்பர்களிடமும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத பணமும், தங்கமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வருகின்றன.
 
வருமான வரித்துறை சோதனை முடிந்ததும் அமலாக்கத்துறையும் ராம மோகனராவ் மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சிபிஐயின் நடவடிக்கையும் அவர்கள் மீது விரைவில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
 
இந்த சூழலில் அவர் கைது செய்யப்படுவதை தடுக்க நெஞ்சுவலி எனக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் கார்டன் தரப்பு மருத்துவமனை தரப்பிடம் பேசியதாகவும் அதன் பின்னர் ராம மோகனராவ் உடல்நலக்குறைவு என மருத்துவமனையில் படுத்ததாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :