வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:12 IST)

ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!

army
ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!
ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஆவேசமாக பேசி உள்ளார். 
 
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போராட்டத்தில் ஒரு சில முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரியான பாண்டியன் என்பவர் ராணுவ வீரர் பிரபுவை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்தார். 
 
ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்க மாட்டோம் என்று அவர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva