ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (07:31 IST)

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

sathuragiri
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பிரதோஷ தினத்தில் சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வரும் நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து வைகாசி மாத பிரதோஷத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பிரதோஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவார்கள் என்பதும் ஆனால் அதே நேரத்தில் மழைக்காலங்களில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதன் தெரிந்தது.

இந்த நிலையில் வைகாசி மாத பிரதோஷத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த  நிலையில் திடீரென தற்போது பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதை அடுத்து வைகாசி பிரதோஷத்திற்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ஷ்ட அடைந்துள்ளனர்.

Edited by Siva