1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (11:28 IST)

குரூப் 1 தேர்வு - வயது உச்சவரம்பு அதிகரிப்பு

குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்சவரம்பை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மானியம் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
 
குரூப் 1 தேர்வுக்கான உச்சவரம்பு வயதை மாற்றக்கோரி பல்வேறு நாட்களாக கோரிக்கைள் விடப்பட்ட நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, குரூப் 1, 1ஏ, 1பி தேர்வு எழுதுவோருக்கான வயது உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 
அதன்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உச்சவரம்பு வயது 35லிருந்து 37ஆகவும், அதேபோல் பொதுப்பிரிவினருக்கு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என முதல்வர் கூறினார்.