1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (18:56 IST)

அரசு பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.35 லட்சம் பணம்.. பறக்கும் படையினர் பறிமுதல்..!

flying cards
அரசு பேருந்தில் 35 லட்சம் ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தேர்தல் அறிவிப்பு வெளியாகி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் பணம் மட்டுமே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லலாம் என்றும் அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்ட பேருந்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தபோது ஒரு வாலிபர் 35 லட்சம் பணத்தை கொண்டு சென்றது தெரிய வந்தது 
 
அவரிடம் நடத்திய விசாரணையில் கோவையில் நிலம் வாங்கி உள்ளதாகவும் நிலம் விற்பனை செய்த நபருக்கு பணத்தை எடுத்துச் செல்வதாகவும் கூறினார். இருப்பினும் அவரிடம் பணத்திற்குரிய எந்த ஆவணங்களும் இல்லை என்பதால் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் பணத்தை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran