1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , வியாழன், 20 ஜூன் 2024 (14:22 IST)

ஜெனகை மாரியம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!

மதுரை மாவட்டம, வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி பெருந்திருவிழா 10ம் நாள் பூக்குழி திருவிழா நடைபெற்றது. 
 
இவ்விழாவை முன்னிட்டு, அர்ச்சகர் சண்முகவேல் மேளதாளத்துடன் வைகை
ஆற்றுக்கு சென்று ,அங்கு அக்னிகரகம் ஜோடித்து பூஜைகள் செய்தார்.
 
அங்கிருந்து புறப்பட்டு, வடக்குரதவீதி, மார்க்கெட்ரோடு வழியாக பூக்குழி மைதானம் வந்தனர்.
 
கோவில் அர்ச்சகர் சண்முகவேல் கரகத்துடன் பூக்குழி இறங்கினார்.இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 
நிறைவாக, மணிகண்டன் என்பவர் 21 அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினார்கள்.சோழவந்தான்சட்டமன்றஉறுப்பினர்வெங்கடேசன்,சோழவந்தான்பேரூராட்சித் தலைவர்  ஜெயராமன், வாடிப்பட்டி பால்பாண்டி, கோவில் செயல்அலுவலர் இளமதி,எம்.வி.எம். குழுமத்தலைவர் மணி முத்தையா,வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன்,சத்யபிரகாஷ், வழக்கறிஞர் சிவக்குமார், கோவில் பணியாளர்கள் பூபதி,கவிதா ,வசந்த் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சமயநல்லூர் டி.எஸ்‌.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் உள்பட தீயணைப்பு படையினர், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை சார்பாக, இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.