செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 நவம்பர் 2023 (09:14 IST)

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை!

Vaigai
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து வைகை ஆற்றின் கரை அருகே உள்ள சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வைகை ஆற்றுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து வைகை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுவதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது

இந்த நிலையில் மதுரை யானைக்கால் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீரின் அளவு அதிகரித்துள்ளதால் வைகை ஆற்றின் கரையோரத்தில் மீனாட்சி கல்லூரியில் இருந்து செல்லூருக்கு செல்லக்கூடிய சாலை மற்றும் ஆழ்வார்புரத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லும் சாலை ஆகியவற்றில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் இரும்பு தடுப்புகளை வைத்து வாகனங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வைகை ஆற்றின் கரையோர உள்ள மக்கள் ஆற்றில் குளிக்க, கால்நடைகளை மேய்க்க கூடாது என்றும் அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran