சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது முதல் வந்தே பாரத் ரயில்: மலர்கள் தூவி வரவேற்பு
சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது முதல் வந்தே பாரத் ரயில்: மலர்கள் தூவி வரவேற்பு
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இன்று மைசூரில் இருந்து கிளம்பிய நிலையில் சற்று முன்னர் சென்னை வந்தடைந்தது. பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மலர்கள் தூவி வந்தே பாரத் ரயிலை வரவேற்றனர்.
இந்தியாவின் மிக அதி விரைவு ரயில் வந்தே பாரத் என்பதும், இந்த ரயில்கள் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மைசூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரயில் சற்று முன்னர் பெங்களூரு வழியாக சென்னை வந்துள்ளதை அடுத்து அந்த ரயிலை ரயில்வே அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு அதிவிரைவு ரயில் விடப்பட்டுள்ளது பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva