Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் தொடர் தி விபத்து. ஆழ்வார்ப்பேட்டை கலர் லேபில் தீ


sivalingam| Last Modified ஞாயிறு, 11 ஜூன் 2017 (22:11 IST)
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீப்பற்றியதன் அதிர்ச்சியே சென்னை மக்களின் மனங்களில் இருந்து இன்னும் நீங்காத நிலையில் அடுத்தடுத்து தீவிபத்து நடந்து வருவது அதிர்ச்சியை தருகிறது.


 


இன்று பிற்பகல்  பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் அமைந்துள்ள ஏர்டெல் கடை மற்றும் தினா கலர் லேப் ஷோ ரூம் ஆகிய இரண்டு கடைகளிலும் தீ விபத்து ஏற்பட்டது.

கலர் லேபில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என  கூறப்படுகிறது. கடையில் இருந்து புகை வருவதை பார்த்த பொறியியல் மாணவர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இன்று இரண்டு கடைகளுமே விடுமுறை என்பதால் எந்தவித உயிரிழப்பும் இல்லை. இருப்பினும் சேதமதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை என்றும் நாளை காலை இதுகுறித்து கணக்கிடப்படும் என்று கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :