ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (21:39 IST)

சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்

fire accident
சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்
சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர் 
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது 
 
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது 
தீ விபத்து ஏற்பட்டவுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்ததால் உயிர்சேதம் எதுவும் இல்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது