சென்னை மாநகர பேருந்தில் தீடீர் தீ விபத்து: பயணிகள் ஓட்டம்
சென்னை வில்லிவாக்கம்-பட்டினப்பாக்கம் இடையே செல்லும் மாநகர பேருந்தில்(27-டி) திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
சென்னை வில்லிவாக்கம்-பட்டினப்பாக்கம் இடையே செல்லும் மாநகர பேருந்து(27-டி) பட்டினம்பாக்கம் நோக்கி சென்றது. அப்போது மெரினா காமராஜர் சாலையில் பேருந்து நின்று கொண்டிருந்தபோது, பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.
திடீரென்று என்ஜின் தீப்பிடித்து எரிந்துள்ளது, அதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.