1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (15:15 IST)

நிதி நிறுவன மோசடிகள்- போலீஸார் அதிர்ச்சி தகவல்

money
நாட்டில்  நிதி நிறுவன மோசடிகளால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு  பொருளாதார்  குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  இதுபோன்றுபொருளாதார  குற்றங்களில் ஈடுபட்ட அந்த ஏஜென்டுகள் யார் என்பதை விசாரித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் புதிய அதிர்சியான தகவல் தெரிவித்துள்ளனர்.
 
அதில், ஆருத்ரா,  ஹிஜாவு, ஐ.எப்.எஸ் போன்ற பெரிய நிதி   நிறுவனங்களுக்கு மூளையாகச் செயல்பட்டது ஒரே ஏஜென்டுகள் தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு ஏஜென்ட் தனக்கு கீழ் 100 நபர்களை வைத்துக்கொண்டு, நிறுவன தொடக்கத்தில் அவர்களை இணைய வைத்து கமிஷன் பெறுகிறார்.  நிறுவனத்தின் லாபமடைவது போல மக்களை நம்பவைத்து, நிறுவத்தில் பலரை இணையவைக்கின்றனர். 
 
பொதுமக்கள் அதில் இணைந்தவுடன் அந்த ஏஜென்டு தனக்கு கீழ் உள்ள நபர்களை அழைத்து வேறொரு நிறுவனத்தில் இணைந்து மோசடியில் ஈடுபடுகின்ற்னர்.
 
சம்பந்தப்பட்ட   நிறுவனமே தங்களின் தொழிலைப் பெருக்க வேண்டி, ஏஜென்டுகளுக்கு கமிஷன் கொடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.