1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 7 ஜூன் 2017 (15:28 IST)

சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் அணியினர் அடிதடி குடுமிபிடி சண்டை (வீடியோ)

சத்யமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் அணி தலைவி ஜான்சிராணி மற்றும் ஹசீனா ஆதரவாளர்கள் ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலில் ஜான்சிராணி கடுமையான தாக்கப்பட்டார்.


 

 
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல பிரிவினைகள் உள்ளது. இதில் மகளிர் கங்கிரஸ் அமைப்பிலும் பல பிரிவுகள் உருவாகி வருகிறது. குஷ்பு அணி, நக்மா அணி என ஏற்கனவே இரண்டு பிரிவுகள். 
 
மகளிர் காங்கிரஸ் அணி தலைவியாக இருந்த விஜயதாரணி கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டு, ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பதவிக்கு பலரும் போராடி வருகின்றனர். அதில் ஒருவர் நக்மா அணியை சேர்ந்த ஹசீனா. இன்று சத்யமூர்த்தி பவனில் மகளிர் அணி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதில், ஹசீனா ஆதரவாளர்கள் ஜான்சிராணியை கடுமையான வார்த்தைகள் கொண்டு திட்டியுள்ளனர். இது ஜான்சிராணிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜான்சிராணியும் பதிலுக்கு பேசியுள்ளார். இதையடுத்து இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு, ஜான்சிராணி கடுமையாக தாக்கப்பட்டார். ஆண்களும் சிலர் புகுந்து தாக்குதலில் ஈடுப்பட்டனர். 
 
இதையடுத்து செய்தியாளர்களை சந்திந்த மாநில தலைவர் திருநாவுக்கரசர், சதயமூர்த்தி பவனில் பிரச்சனைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.