செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (14:34 IST)

புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்

Prisoner
சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் 2 பெண் வார்டன்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் குற்றவாளி(32). இவர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நேற்று சிறைக்காவலர்கள் இருவர், பார்வையாளர்கள் அறையைச் சுத்தம் செய்ய வேண்டி, ஜெயந்தியை அழைத்துச் சென்றனர்.

அந்தப் பார்வையாளர்கள் அறையை வெளியில் இருந்துதான் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிகிறது.

சுத்தம் செய்து கொண்டிருந்த ஜெயந்தி, போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கிருந்து தப்பியோடினனார்.

இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து கைதி ஜெயந்தியை தேடி வருகின்றனர்.