திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (12:53 IST)

பிப்ரவரி 8 ஆம் தேதி கருஞ்சட்டை போராட்டம் - திமுக அறிவிப்பு

T.R.balu
தமிழ் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காத மத்திய அரசின் ஓரவஞ்சனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், சமீபத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் தொடங்கியது. அடுத்த நாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை வாசித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலை அடுத்து, முழுமையாக பட்ஜெட்டை பாஜக அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

ஆனால், காங்கிரஸ், திமுக கடுமையான விமர்சனம் தெரிவித்தன.

இந்த நிலையில்,   தமிழ் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காத மத்திய அரசின் ஓரவஞ்சனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.