பெற்ற மகளை லாட்ஜில் வைத்து கற்பழித்த தந்தை - திருச்சியில் கொடூரம்


Murugan| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (13:40 IST)
தான் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மணப்பாறையில் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் நாகராஜ். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நாகராஜுடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
 
இந்நிலையில், இரவு நேரங்களில் கரும்பு வெட்டும் வேலையை செய்து கொண்டிருந்த போது, தனது மூத்த மகளை நாகராஜ், கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளர். இதைக் கண்ட அவரது மனைவி கூச்சலிட அங்கிடிந்து ஓடி சில நாட்கள் தலைமறைவாகி விட்டார். அதன்பின் வீட்டிற்கு சென்ற அவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்துள்ளார். அதன் பின், மகளை பள்ளியில் சேர்ப்பதாக கூறி அழைத்து சென்ற அவர் மணப்பாறையில் ஒரு விடுதியில் அறை எடுத்து, அங்கு வைத்து தனது மகளை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
அவரிடமிருந்து எப்படியோ தப்பி வந்த சிறுமி, தனது தாயிடம் இதுபற்றி கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, நாகராஜின் மனைவி பரிமளா, இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
அதன்பேரில் நாகராஜை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின் சிறையிலடைத்தனர்.
 
சமீபகாலமாக, பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாதகாரம் செய்து வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :