மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணம் வரை சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணமடையும் வரை சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் என்ற பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரடங்கு நேரத்தில் பள்ளி விடுமுறை நேரத்தில் 16 வயது சிறுமி வீட்டில் இருந்தார்
அப்போது அவரை அவரது பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கில் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டுள்ளது. மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு அவர் மரணமடையும் வரை சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது
இந்த நிலையில் தந்தையால் வன் கொடுமைக்கு உள்ளான சிறுமிக்கு உடல்நலக்குறைவு காரணமாக குழந்தை இறந்தே பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது