வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:15 IST)

50 வயதில் 2வது திருமணம்.. தடையாக இருந்த மருமகளை கொலை செய்த மாமனார்..!

murder
50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய தடையாக இருந்த மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நெல்லையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மனைவி உயிரிழந்த நிலையில் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது மகன் தமிழரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது எழுதிக் கொடுத்த வீட்டை திரும்ப தனது மகனிடம் கேட்டதாகவும் தெரிகிறது. 
 
இதனை அடுத்து மகன் மற்றும் மருமகள் வீட்டை திரும்ப தர மறுத்ததோடு 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டாம் என எச்சரித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் மகன் மற்றும் மருமகளுடன் சண்டை போட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து மருமகள் முத்துமாரியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். இந்த நிலையில் தங்கராஜ் தற்போது தலைமறைவாகி இருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
Edited by Mahendran