Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

8ஆவது படிக்கும் மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!

Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (00:35 IST)

Widgets Magazine

கன்னியாகுமரியில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (48). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். ஜார்ஜின் 2வது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த, தனது இளைய மகளுக்கு ஜார்ஜ் பாலியல் தொல்லை கொடுத்தார். தந்தையின் தவறான நடத்தைக் குறித்து சிறுமி பக்கத்து வீட்டார்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர். உடனே குழித்துறை அனைத்து மகளிர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, தன்னிடம் தனது தந்தை தவறாக நடந்துகொண்ட சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

சிறுமியின் புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்துகொண்ட காவல் துறையினர் ஜார்ஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

“ஓ.பி.எஸ்-ஐ திமுக ஆதரிக்கும்”: திமுக துணைப் பொதுச் செயலாளர் அதிரடி

திமுக உறுதியாக ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்கும் என திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான ...

news

’தமிழகத்தில் மோதல் முற்றி சட்டம் ஒழுங்கு சீர்கெடும்’ - எச்சரிக்கும் திருநாவுக்கரசர்

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றால், சமூக மோதல் முற்றி, ...

news

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.வை பாராட்டி கட்-அவுட் வைத்த பொதுமக்கள்

சசிகலா ஆட்சி அமைப்பதா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி அமைப்பதா என்ற அரசியல் பரபரப்பு ...

news

ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ள 12 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம்?

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது ஓ. ...

Widgets Magazine Widgets Magazine