வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (10:26 IST)

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

Arrest
23 வயது கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி தந்தை, மகன் ஆகிய இருவரும் சேர்ந்து மிரட்டி பணம் பறித்த நிலையில், தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்தபோது, Instagram மூலம் 27 வயது சுதீப் என்ற இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தனது அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

சுஜித் மட்டும் அல்லாமல், சுஜித்தின் தந்தையும் சேர்ந்து 50,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய நிலையில், இதுகுறித்து கல்லூரி மாணவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரில் உண்மை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து, சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிளஸ் 2 மட்டுமே படித்த சுஜித், பணம் வசூலிக்கும் ஏஜென்ட் ஆகவும், மாவு கடை ஒன்றிலும் வேலை பார்த்த நிலையில், Instagramல் பழக்கமான கல்லூரி மாணவியை மிரட்டியுள்ளார். அவரது தந்தையும் சேர்ந்து மிரட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran