வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2024 (14:35 IST)

தங்க தமிழ்ச்செல்வனுக்கு விவசாயிகள் எதிர்ப்பு.. பிரச்சாரம் செய்யாமல் திரும்பிய சோகம்..!

Thanga Tamilselvan
தேனியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் பிரச்சாரம் செய்யாமல் திரும்ப சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக தங்கத்தமிழ் செல்வன் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜக கூட்டணி கட்சியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இருவருக்கும் இந்த தொகுதிகள் கடும் போட்டியின் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று தங்கத்தமிழ்செல்வன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது பூமாலைகுண்டு என்ற கிராமத்தில் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் ஆகியோரும் போராட்டங்களை நடத்தினார்கள்
 
 ஆனால் அரசாணைப்படி நீர் திறக்கும் என்று திமுக அரசு வாக்குறுதி கொடுத்த,து ஆனால் மிகவும் தாமதமாகவே நீரை திறந்தது என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். தங்கத்தமிழ் செல்வனுக்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் ஒலிபெருக்கி இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் பிரச்சாரம் செய்யாமல் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
Edited by Mahendran