1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2015 (11:12 IST)

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வீடியோ கேம் விளையாடிய பெண் அதிகாரி

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர் வீடியோ கேம் விளையாடியடியது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
அப்போது, விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விவேகானந்தன் பதில் அளித்தார். பின்னர் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி விவசாயிகள் குறைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருகே அமர்ந்திருந்த அரூர் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனரான கவிதா செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருந்ததை கூட்டத்திற்கு வந்த சிலர் புகைப்படம் எடுத்தனர்.
 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கவிதா விளையாட்டை நிறுத்திவிட்டு கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தார். சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் அவர் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது 'வாட்ஸ் அப்' மூலம் வேகமாக பரவி வருகிறது.