திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (10:06 IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு: போக்குவரத்து துறை அறிவிப்பு..!

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை கட்டணக்குறைப்புக்கு விளக்கம் அளித்துள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.430 ஆக நிர்ணயம்

 கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருந்தாலும் சென்னை நகரில் இருந்து கிளம்பாக்கம் செல்வதற்கு அதைவிட அதிகம் செலவாகிறது என பயணிகள் புலம்பி வருகின்றனர்

Edited by Mahendran