வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (15:25 IST)

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம்: கைதான ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் கைதான ஹரிஷ் என்பவரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரம்  இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இதுவரை 50 நபருக்கு அவர் போலியாக டாக்டர் பட்டம் வழங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து அவரது வங்கி கணக்கை சென்னை போலீசார் முடக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
டாக்டர் பக்கம் வழங்கி அதன் மூலம் பெற்ற வருமானத்தில் அவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பல சினிமா பிரபலங்களுக்கு அவர் போலி டாக்டர் பட்டம் வழங்கியதில் ஏராளமான பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இது குறித்து ஹரிஷ் மீது போலீஸ் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
Edited by Siva