திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (13:36 IST)

அரசு பேருந்தில் போலி டிக்கெட்: கையும் களவுமாக மாட்டிய நடத்துனர் - ஓட்டுனர்..!

போலி சினிமா டிக்கெட், போலி கிரிக்கெட் போட்டி டிக்கெட் ஆகியவை குறித்த செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது போலி பஸ் டிக்கெட் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடலூர் மாவட்டம் வடலூரில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இணைந்து  போலி டிக்கெட்டுக்களை  பயணிகளுக்கு வழங்கி உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுபிடித்து இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.  
 
மேலும் அச்சடித்த போலி டிக்கெட்டுக்களை நடத்துனர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்ததை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் இதனை அடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.  
 
பயணிகள் முன்னிலையில் போலி டிக்கெட்டுகள் நடத்துனர் வழங்கியதை அதிகாரிகள் பிடித்ததை அடுத்து பயணிகள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran