செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (15:50 IST)

ஃபேஸ்புக்கில் பழகி ஏமாற்று திருமணம் செய்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

judgement
திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக் மூலம் பழகிய சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணை,  பதிவுத்திருமணம் செய்து ரூ.72.85 லட்சம் வரதட்சணையாக பெற்று, 3வது திருமணம் செய்ய முயன்ற புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
மேலும் சோலை ராஜனின் தாய் ராஜாம்மளுக்கு 20 ஆண்டுகள், தங்கை கமலஜோதிக்கு 15 ஆண்டுகள், சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள், சித்தப்பா நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மொத்தமாக ரூ.5.80 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது