வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மே 2024 (10:02 IST)

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அளித்த குவாரி நிர்வாகம்..!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகை ரொக்கமாக ரூ.50 ஆயிரம், காசோலையாக ரூ.11.50 லட்சம், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக நேற்று செய்தி வெளியான நிலையில் அரசு சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நிவாரண நிதியை அறிவித்தார். இந்த நிலையில் தற்போது குவாரி சார்பிலும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே  ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரியில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின என்றும், இந்த வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியானதாகவும், 2 வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்ததாகவும் செய்தி வெளியானதூ.
 
 
Edited by Mahendran