1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (14:50 IST)

மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகைக்கான தேர்வு... நாளை ஹால்டிக்கெட் வெளியீடு

பள்ளி மாணவர்கள் மாதம் ரூ.1500 பெறுவதற்கான திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில்,  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அறிவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த வருடம் முதல் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் அனைத்து வகைப்பாடப் பிரிவைச் சார்ந்த மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.  மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.1500 மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் . எனவே இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை பதிவிறக்கம் செய்து கொள்ளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Edited by Sinoj