வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2016 (16:30 IST)

அதிமுகவிடம் பணம் வாங்கியது தேமுதிக: போட்டுடைத்த சந்திரகுமார்

தேமுதிக, திமுக உடன் கூட்டணி அமைக்காமல் மக்கள் நல கூட்டணியுடன், கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் அக்கட்சி மீதும் கட்சி தலைமை மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.


 
 
117 இடங்களை திமுகவிடம் கேட்டு திமுகவின் முக்கிய தலைவர் ஒருவரின் வீட்டுக்கு விஜயகாந்த் நேரடியாக சென்று கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார் என கூறினார் சந்திரகுமார்.
 
மற்றொரு பக்கம் பாஜகவுடன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் அங்கு பேரம் படியாததால் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு போனதாக சந்திரகுமார் குற்றம் சாட்டினார்.
 
இந்நிலையில், தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேடியளித்த சந்திரகுமார் அதிமுகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருப்பதாக அம்பலப்படுத்தினார்.
 
மேலும் கட்சி நலனை பார்க்காமல் குடும்ப நலனை முன்னிறுத்துவதில்தான் பிரேமலதா அக்கறையாக உள்ளார் என கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் கூறினார்.