நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்


Ashok| Last Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)

சென்னையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நக்மாவை, சினிமாவில் அவ்வளவு அழகாக அவர் தெரியவில்லை ஆனால், நேரில் பார்க்கும் போது நல்ல அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 

 சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் " நக்மாவை நடிகையாக இருக்கும் போது போட்டோ ஆல்பத்தில் பார்த்திருக்கிறேன். 

சில பெண்கள் போட்டோவில் அழகாக இருப்பார்கள், நேரில் அழகாக இருக்கமாட்டார்கள், நேரில் அழகாக இருப்பவர்கள், போட்டோவில் அழகாக தெரிவதில்லை. பல பெண்களை பார்த்து, நான் இதை அறிந்து இருக்கிறேன்அந்த வகையில், சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை.

தற்போது, அவரை நேரில் பார்க்கிறேன் நல்ல அழகாகவும் முன்பு இருந்ததை விட இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ  சொல்லவில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :