1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (19:04 IST)

”மனோரமாவின் வெட்கப்பட்ட புன்னகை இன்றும் நினைவில் நிற்கிறது” - வைரமுத்து உருக்கம்

ஒரு திரைப்படம் குறித்து பேசிய போது, அவரது வெட்கப்பட்ட புன்னகை இன்றும் எனது நினைவில் நிற்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
 

 
நேற்று இரவு 11 மணியளவில், உடல் நலக்குறைவு காரணமாக நடிகையர் திலகம் மனோரமா உயிரிழந்தார். மனோரமாவின், உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள், திரைத்துறையினர், மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 
மனோரமாவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில், “மதிக்கப்படுவருக்கும், நேசிப்பவருக்கும் இடையில் வேறுபாடு உண்டு. இவர் மீது நான் வைத்த மதிப்பும், நேசமும் அதிகம், அவர் யாரையும் புறம் பேசியதில்லை.
 
அவர் நடிக்காத படங்கள் கிடையாது, அவர் நடித்த படம் பட்டியலிடப்படுவதைவிட 1960 - 1970 களில் அவர் நடிக்காத படம் தான் பட்டியலிட வேண்டும். அவர் அடைந்த உயரம் இன்னொரு நடிகைக்கு வாய்க்காது.
 
மாலையிட்டமங்கை வந்தபோது மனோரமா கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்ற எண்ணத்தில் இருந்தார் மனோரமா. ஆனால் கண்ணதாசன் அவருக்கு சில அறிவுரை வழங்கினார்.
 
அதாவது கதாநாயகியாக நடித்தால் சில தூரம் மட்டும் பயணிக்க முடியும், நகைச்சுவை நடிகையாக இருந்தால் காலம் தோறும் பணியாற்றலாம் என கண்ணதாசன் கூறியதை ஏற்று அவர் நடித்தார்.
 
இது தான் அவரது நீண்ட கால திரை வாழ்வுக்கு சக்தியாக இருந்தது. சமீபத்தில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, ஒரு திரைப்படம் குறித்து பேசிய போது, அவரது வெட்கப்பட்ட புன்னகை இன்றும் எனது நினைவில் நிற்கிறது" என்று கூறியுள்ளார்.