திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (21:34 IST)

வேலை தேடும் இளைஞர்களுக்கு , ESIC - ன் நிதி உதவித்திட்டம் !

மாநிலத் தொழிலாளர் காப்பீடு நிறுவனம் (ESIC )தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அதில், தனியார் நிறுவனத்தில் இருந்து வேலை இழந்தவர்கள் ,மற்றும் வேலை தேடுபவர்களுக்கும்  24 மாதங்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ’அடல் பிமிட் வியாகிட் யோஜனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு நிறுவனத்தில் இருந்து வேலை இழந்தவர்கள்,. வருமானம் இல்லாமல் வேறு வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நிதி உதவி செய்வதாக மாநிலத் தொழிலாளர் காப்பீடு கழகம் அறிவித்துள்ளது.
 
அதில், ஒருவர் பெற்று வந்த வருமானம்  90 நாட்களில் 25   % ஆக  வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து விவரங்கள் பெற..
 
நீங்கள் ESIC -ன் எந்தக் கிளையிலும் என்ற வெப்சைட்டுக்குச் சென்று அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு இந்த ( www.esic.nic.in ) வெப்சைட்டுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.