வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:11 IST)

தடுப்பூசி போட யாருமே வரவில்லை: ஈரோட்டில் மூடப்பட்ட மையம்

கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இருந்த நிலையில் நேற்று முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மையங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் இன்று இரண்டாவது நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் ஈரோட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்தவர்கள் யாரும் வராததால் தடுப்பூசி மையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
ஈரோடு தடுப்பூசி சிறப்பு மையத்தில் தினமும் 500 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்திருந்த நிலையில் முதல் நாளான நேற்று 99 பேர்கள் மட்டுமே தடுப்பூசி போட வருகை தந்திருந்தனர் மேலே இன்று ஒருவர் கூட கொரோனா தடுப்பூசி போட முன் வரவில்லை என்பதால் தற்காலிகமாக தடுப்பூசி சிறப்பு மையம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.